சர்வதேச பாதுகாப்பு உடன்படிக்கை

Photograph of safety inspectorsஅமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி செய்வதில் வங்கதேசம் நான்காவது பெரிய நாடாகும். அதன் ஏற்றுமதியில் 80 சதவீதத்தை ஆடைத் தொழில்துறை கொண்டுள்ளதோடு, 3.5 மில்லியன் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. குறைந்த ஊதியம், வாய்மொழி மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல், சிறந்த பணிக்சூழல் கோரினால் பழிவாங்கப்படுதல், தீவிர பாதுகாப்பாற்ற தொழிற்சாலை கட்டடங்கள் உள்பட, இந்த துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிக மோசமான நிலைமைகளை எதிர்கொள்கிறார்கள்.

2005 ஆம் ஆண்டிலிருந்து தீ மற்றும் கட்டட பாதுகாப்பு பேரழிவுகள் போன்ற பாதுகாப்பற்ற சூழல்களால் சுமார் 2,000 வங்கதேச தொழிலாளர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தையும் தடுத்திருக்க முடியும். 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தொழில்துறை வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக பதிவான ரானா பிளாசா கட்டடம் இடிந்த சம்பவத்தில் மட்டுமே 1,134 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ரானா பிளாசாவில் இருந்த தொழிற்சாலைகள் ஜேசிபென்னி, தி சில்ட்ரன்ஸ் பிளேஸ் மற்றும் வால்மார்ட் உள்பட பல பிரபல பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு உற்பத்தி செய்து வந்தன. இதில் பல கம்பெனிகள்ஈ அந்த கட்டடம் இடிந்தது மாதம் வரை தொழிற்சாலை தணிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பேரழிவுக்கு வழிவகுத்த இந்த பாதுகாப்பு விதிமீறல்களை இனம்கண்டு, சரிசெய்ய இத்தகைய தணிக்கைகள் தவறிவிட்டன.

 

புதிய மாதிரி: உடன்படிக்கை

2013ம் ஆண்டு ஹானா பிளாசா இடிந்தபோது, வங்கதேசத்தில் உள்ள விநியோக தொழிற்சாலைகளில் சிறந்த பாதுகாப்பு மேம்பாடுகளைக் கொண்டுவருவதற்காக, தீ மற்றும் கட்டிடப் பாதுகாப்பு தொடர்பான ஆடை பிராண்டுகளின் அணுகுமுறையின் அடிப்படையை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஏற்கெனவே பல ஆண்டுகளாக டபிள்யூஆர்சி பணியாற்றி வந்தது. இந்த பேரழிவை தொடர்ந்து குவிந்த சர்வதேச கவனத்தால், பேச்சுவார்த்தைக்கு உட்பட வேண்டிய கட்டாயம் வணிக பிராண்டுகளுக்கு ஏற்பட்டது. டபிள்யூஆர்சி மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் சேர்ந்து, வங்கதேசத்தில் கட்டடம் மற்றும் தீ பாதுகாப்பு பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த கம்பெனிகளை சம்மதிக்க வைத்தன. தொழிலாளர்கள், தொழிற்சாலை மேலாளர்கள் மற்றும் வணிக பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தேவைப்படும் ஆடை நிறுவனங்களுக்கு இடையிலான முதல் சட்டபூர்வ ஒப்பந்தம் இதுவாகும். அவை செய்ய வேண்டியவை:

  • தகுதியான நிபுணர்கள் மற்றும் பெறியாளர்களின் சுயாதீன முழு ஆய்வுக்கு அவற்றின் விநியோக தொழிற்சாலைகளை உட்படுத்த வேண்டும்.
  • இந்த ஆய்வுகளின் முடிவுகளை அறிந்துகொள்ளும் தரவுதளத்தில், வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
  • அத்தியாவசிய பாதுகாப்பு சீரமைப்புகளுக்கு பணம் செலுத்த உதவ வேண்டும்.
  • அவசியமான பாதுகாப்பு பழுதுகளை பார்க்காத அனைத்து தொழிற்சாலைகளோடும் வியாபாரம் செய்வதை நிறுத்த வேண்டும்.

தொழிலாளர்கள் தங்களின் தொழிற்சாலையில் மீறப்படும் உடன்படிக்கைக்கு எதிராக, பெயரை குறிப்பிடாமலேயே முறையிடும் புகார் பொறிமுறையை இந்த உடன்படிக்கை கூடுதலாக வழங்குகிறது. கையொப்பமிட இணங்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய அமலாக்கப் பொறிமுறையும் இதில் அடங்கும்.

ஆடை தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிமீறல்களின் கண்காணிப்பில்

அடிப்படை மாற்றத்தை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது. முந்தைய பெருநிறுவன (கார்பரேட்) தலைமையிலான திட்டங்கள் தன்னார்வத்தால் செய்யப்பட்டவை என்பதால், அவற்றின் அமலாக்க பொறிமுறைகளும், வெளிப்படைத் தன்மையையும் குறைந்திருந்தன. இந்த உடன்படிக்கையின் கீழ், தங்களின் ஆடைகளை உற்பத்தி செய்கிற தொழிலாளர்கள் பாதுகாப்பான பணிச்சூழலில் வேலை செய்வதை உறுதிசெய்வதற்கு, வணிக பிராண்டுகளும், சில்லறை விற்பனையாளர்களும் சட்டப்படி பொறுப்பானவர்கள்.

 

இன்றைய ஒப்பந்தம்

கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு அசல் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ள 2018 உடன்படிக்கையில், சுமார் 200 வணிக பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கையெழுத்திட்டுள்ளன. உலகிலுள்ள நான்கு பெரிய சில்லறை விற்பனையாளர்களில், ஹெச்&எம், இன்டிடெக்ஸ், யுனிக்லோ ஆகிய மூன்று பிராண்டுகள் கையெழுத்திட்டுள்ளன. இவை மூன்றும் சேர்ந்து வங்கதேசத்தில் 1,600 தொழிற்சாலைகளில் இருந்து தயாரிப்புகளை பெறுகின்றன. இருபது லட்சம் தொழிலாளார்களுக்கு மேலானோர் இந்த தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர்.

இத்தகைய தொழிற்சாலைகளில் மேற்கொண்ட ஆய்வுகளில், அமைப்பு சார் சேதங்கள் முதல் பாதுகாப்பற்ற தீ வெளியேறும் பாதைகள் வரையான சுமார் 1,30,000 பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்போது, இந்த பாதுகாப்பு விதிமீறல்களில் பெரும்பாலனவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி வங்கதேசத்தின் இந்த உடன்படிக்கை அலுவலகம் அதனுடைய செயல்பாடுகளை சமீபத்தில் நிறுவப்பட்ட உள்ளூர் நிறுவனமான ஆயத்த ஆடை நிலைத்தன்மை கவுன்சிலுக்கு (ஆர்எஸ்சி) மாற்றியது. இந்த உடன்படிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு திட்டங்களை வங்கதேசத்தில் செயல்படுத்தும் நிறுவனமாக ஆர்எஸ்சி அமைக்கப்பட்டாலும், உடன்படிக்கையின் ஒப்பந்தத்தை மாற்றுகின்ற நோக்கம் கொண்டதல்ல; இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தின் படி மூன்று மாத நீட்டிப்புக்கு பின்னர் ஒப்பந்தத்தின் காலக்கெடுவான 2021 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வணிக பிராண்டின் கடமைகள் மாறாமல் இருந்தன.

வங்கதேசத்தில் இந்த உடன்படிக்கையின் மாதிரி, நூற்றுக்கணக்கான, சுமார் ஆயிரக்கணக்கான, தொழிலாளர் உயிரிழப்புகளைத் தடுத்துள்ளது. ஆனால், அங்கு இன்னும் பல தொழிற்சாலைகளுக்கு சீரமைப்பு தேவைப்படுவதால், அந்த மாதிரியை தொடருகின்ற ஒரு பிணைப்பு பின்தொடர் ஒப்பந்தத்தை உருவாக்க தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் உரிமை வழக்கறிஞர்கள் முன்மொழிந்தனர். மேலும்,

ஆடைத் தொழிலாளிகளின் உயிர்கள் வழக்கமாக ஆபத்தில் இருக்கும் பாகிஸ்தான் போன்ற மற்ற நாடுகளுக்கும் இந்த மாதிரியை விரிவுபடுத்தவும் கேட்டுக்கொண்டனர்.

2021 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் வெற்றிகரமான முடிவு, வங்கதேசத்தில் இந்த ஒப்பந்தம் பெற்ற பெரும் பயன்கள் பராமரிக்கப்பட்டு தொடரும் என்பதை உறுதிசெய்துள்ளது. அதனால் உருவான புதிய 26 மாத சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டு செப்படம்பர் 1-ம் தேதி முதல் அமலாகியது. இது,

வங்கதேச உடன்படிக்கையால் நிறுவப்பட்ட புரட்சிகர மாதிரியின் முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது: வணிக பிராண்டுகளின் கடமைகளை சட்டப்பூர்வமாக செயல்படுத்துதல், பிராண்டுகளின் பணி இணக்கத்தில் சுயாதீன மேற்பார்வை, பாதுகாப்பான பணியிடங்களை பராமரிப்பதற்காக, விநியோகம் செய்வோருக்கு போதுமான கட்டணம் செலுத்த வேண்டிய கடமை மற்றும் பாதுகாப்பாக செயல்பட மறுக்கும் எல்லா தொழிற்சாலைகளோடும் வணிகம் செய்வதை நிறுத்த வேண்டிய கடமை. வங்கதேசத்தில் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியுள்ள இத்தகைய மாதிரி, தினமும் ஆபத்தான நிலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் உடைய பிற நாடுகளில் விரிவுப்படுத்தப்படும். 170 ஆடை கம்பெனிகள் ஜவுளி மற்றும் ஆடைத் தொழில்துறையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்கிற இந்த புதிய சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

 

டபிள்யூஆர்சி-யின் பங்கு

இந்த உடன்படிக்கையை அமலக்கி, நடைமுறைப்படுத்துவதில் டபிள்யூஆர்சி முக்கிய பங்காற்றுவதை தொடர்கிறது.  உடன்படிக்கை வழிகாட்டல் குழுவில் சாட்சி கையொப்பமிட்டவராக விளங்கும் டபிள்யூஆர்சி,  உடன்படிக்கையின் கொள்கைகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருவதையும், ஆய்வுகள் மற்றும் சீரமைப்புகள் சரியான நேரத்தில் நடைபெறுகின்றனவா என உறுதிசெய்ய வழிகாட்டும் குழுவினரோடு இணைந்து பணியாற்றுகிறது.